படப்பிடிப்பு தளத்தில் நடிகை மீது மோட்டார் சைக்கிளால் மோதிய ஆசாமி


படப்பிடிப்பு தளத்தில் நடிகை மீது மோட்டார் சைக்கிளால் மோதிய ஆசாமி
x
தினத்தந்தி 7 Dec 2021 5:19 PM IST (Updated: 7 Dec 2021 5:19 PM IST)
t-max-icont-min-icon

படப்பிடிப்பு தளத்தில் நடிகை மீது மோட்டார் சைக்கிளால் மோதிய ஆசாமி மீது கொல்கத்தா போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

பிரபல மேற்கு வங்க நடிகை பிரியங்கா சர்காரும், நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தியும் கொல்கத்தா நியூ டவுன் பகுதியில் நடந்த வெப் தொடர் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்தனர்.

அப்போது படப்பிடிப்பு தளத்தில் மர்மநபர் வேகமாக ஒரு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தார். அந்த மோட்டார் சைக்கிள் படப்பிடிப்பு கருவிகளை தள்ளி விட்டு நடிகை பிரியங்கா சர்கார், நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி மீது பயங்கரமாக மோதியது. இருவரும் கீழே விழுந்தனர். அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இருவரையும் மோதி தள்ளிய மர்ம ஆசாமி நிற்காமல் வேகமாக சென்று விட்டார்.

இந்த விபத்தில் பிரியங்காவுக்கு இடுப்பு மற்றும் கால்களில் படுகாயம் ஏற்பட்டது, உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். எலும்பில் கீறல் இருந்ததால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அர்ஜுன் சக்கரவர்த்தி லேசான காயத்தோடு தப்பினார். கொல்கத்தா போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் வந்து மோதியவரை தேடி வருகிறார்கள்.

Next Story