சமந்தாவை பிரிந்தது ஏன்...? நாக சைதன்யா வீடியோவால் பரபரப்பு...?
தன்னுடைய விவாகரத்து குறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல் மவுனம் காத்து வந்த நாக சைதன்யா தற்போது அவர் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது
சென்னை
நடிகை சமந்தா கடந்த அக்டோபர் மாதம் நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து தனது மூன்று ஆண்டு கால திருமண வாழ்க்கையில் இருந்து வெளியேறினார்.
இதுவரை தன்னுடைய விவாகரத்து குறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல் மவுனம் காத்து வந்த நாக சைதன்யா தற்போது அவர் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அதில் அவர் தனது கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார். “நான் எந்த ஒரு கதாபாத்திரத்தையும் தேர்வு செய்யும் போது அது ஒரு போதும், எனது குடும்பத்தையும், எங்கள் கவுரவத்தையும் பாதிக்கக் கூடாது என்பதில் கவனமாக இருப்பேன். எனது குடும்ப உறுப்பினர்களை சங்கடப்படுத்தும் வேடங்களில் நடிக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
திருமணத்துக்கு பிறகு சமந்தா கவர்ச்சியாக நடித்தது நாகசைதன்யா குடும்பத்துக்கு பிடிக்கவில்லை என்றும் இதனாலேயே இருவருக்கும் தகராறு ஏற்பட்டு பிரிந்ததாகவும் கூறப்பட்டது.
தற்போது நாக சைதன்யா கூறி இருக்கும் பதிலை வைத்து, சமந்தா திருமணத்திற்கு பிறகு... தொடர்ந்து சர்ச்சையான வேடங்களை தேர்வு செய்து நடித்தது தான் விவாகரத்துக்கு காரணமா? என ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அந்த வகையில் திருமணத்திற்கு முன்பு நடித்த கதாபாத்திரத்தை விட திருமணத்திற்கு பின்பு அவர் நடிக்கும் கதாபாத்திரங்கள் மிகவும் சிறப்பு அம்சம் உள்ள திரைப்படமாக அமைந்தது மட்டுமல்லாமல் அவருடைய வளர்ச்சிக்கும் இது முக்கியத்துவம் அளித்து வருகிறது.
சமந்தா 'புஷ்பா' படத்தில் இடம்பெறும் 'ஓ சொல்றியா மாமா' பாடலில் நடனமாடியிருக்கிறார் இந்த பாடல் வேற லெவலுக்கு ரீச் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது
Related Tags :
Next Story