ஜெயம்ரவி படத்தில் நடிக்கிறார் தான்யா ரவிச்சந்திரன்..!


ஜெயம்ரவி படத்தில் நடிக்கிறார் தான்யா ரவிச்சந்திரன்..!
x
தினத்தந்தி 6 Jan 2022 6:09 PM GMT (Updated: 6 Jan 2022 6:09 PM GMT)

நடிகர் ஜெயம்ரவியின் அடுத்த திரைப்படத்தில் நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார்.

சென்னை,

நடிகர் ஜெயம்ரவி நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை 'பூலோகம்' திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக 'ஜே.ஆர் 28' என்று பெயரிடப்பட்டுள்ளது. 

ஆக்சன் திரில்லர் கதையாக உருவாகும் இந்த திரைப்படத்தில ஜெயம்ரவி கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் ஜெயம்ரவி இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால் படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்க இருக்கின்றனர்.

ஏற்கெனவே, நடிகை பிரியா பவானி சங்கர் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கருப்பன் திரைப்படத்தில் நடித்த தான்யா ரவிச்சந்திரனும் இந்த திரைப்படத்தில் மற்றொரு கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு சாம்  சி.எஸ் இசையமைக்கிறார். விவேக் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் பிற நடிகர்கள் மற்றும் குழுவினர் குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Next Story