சினிமா செய்திகள்

நடிகை சாய்பல்லவி நேசிக்கும் உறவுகள் + "||" + Actress Saipallavi Loves Relationships

நடிகை சாய்பல்லவி நேசிக்கும் உறவுகள்

நடிகை சாய்பல்லவி நேசிக்கும் உறவுகள்
தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து வருகிறார் சாய்பல்லவி. அவருக்கு தெலுங்கில் பட வாய்ப்புகள் குவிகின்றன.
சாய்பல்லவி அளித்துள்ள பேட்டியில், “என் வாழ்க்கையில் நான் நேசிக்கும் முக்கிய உறவுகள் அம்மா, தங்கை, பாட்டி. என் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும் என் அம்மாவோடு மட்டும்தான் பகிர்ந்து கொள்வேன். அந்த பழக்கம் எனக்கு சிறு வயது முதலே உள்ளது. என் அம்மாவிற்கு எல்லா விஷயங்களும் சொல்வேன்.

என்னோட சினிமாக்கள், எனது எண்ணங்கள், எனது கஷ்டங்கள், எனது சந்தோஷங்கள், எனது ஆனந்தம், எனது துக்கம் இப்படி எல்லா இதர விஷயங்களையும் கூட என் தாயிடம் பகிர்ந்து கொள்வேன். என் தங்கையுடன் கூட அதிக நேரத்தை கழிக்க விரும்புகிறேன். என் பாட்டி என்றால் (அம்மாவிற்கு அம்மா) எனக்கு மிகமிக இஷ்டம். என் பாட்டி எனக்கு மிகப்பெரிய விசிறி. எனது நடிப்பை பாராட்டும் முதல் ஆள் என் பாட்டி'' என்றார்.