டாக்டர் ராஜசேகருடன் மகள் இணைந்து நடிக்கும் படம்


டாக்டர் ராஜசேகருடன் மகள் இணைந்து நடிக்கும் படம்
x
தினத்தந்தி 21 Jan 2022 9:57 AM GMT (Updated: 2022-01-21T15:27:17+05:30)

டாக்டர் ராஜசேகர் இதுவரை 90 படங்களில் நடித்து இருக்கிறார். 91-வது படம், ‘சேகர்’ என்ற பெயரில் தயாராகிறது.

ராஜசேகர் கதைநாயகனாக நடிக்கிறார். அவருடைய மனைவி ஜீவிதா இயக்குகிறார். ஒரு முக்கிய வேடத்தில், மூத்த மகள் சிவானி ராஜசேகர் நடிக்கிறார். 

படத்தில் ராஜசேகரும், மகள் சிவானியும் தந்தை-மகளாகவே நடிக்கிறார்கள்.
பீரம் சுதாகர ரெட்டி, சிவானி ராஜசேகர், சிவாத்மிகா ராஜசேகர், போகரம் வெங்கட் சீனிவாஸ் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.

படத்தைப் பற்றி டைரக்டர் ஜீவிதா கூறும்போது, ‘‘இந்தப் படத்தில் வரும் அப்பா-மகள் இடையேயான காட்சிகள், ரசிகர்களுக்கு ஈர்ப்பை தரும். இருவரும் நிஜ 
வாழ்க்கையில் எப்படியிருக்கிறார்களோ, அப்படியேதான் திரையிலும் தெரிவார்கள். இரண்டு பேர் தொடர்பான காட்சிகளும் யதார்த்தமாக இருக்கும்’’ என்றார்.


Next Story