நடிகை காவ்யா மாதவனும் விசாரணை வளையத்துக்குள் வர வாய்ப்பு


நடிகை காவ்யா மாதவனும் விசாரணை வளையத்துக்குள் வர வாய்ப்பு
x
தினத்தந்தி 25 Jan 2022 12:12 AM GMT (Updated: 2022-01-25T05:42:12+05:30)

திலீப்பின் திரைப்பட தயாரிப்பு கம்பெனியான கிராண்ட் புரடக்சன்ஸ் மேலாளர் மற்றும் திலீப்பின் சகோதரர் அனூப் ஆகியோரிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

திருவனந்தபுரம், 

நடிகை கடத்தப்பட்டு பாலியல் தொல்லை கொடுத்த வீடியோவை நடிகர் திலீப் அவரது வீட்டில் இருந்து பார்த்து கொண்டு இருந்த போது நடிகை காவ்யா மாதவன் அங்கு இருந்ததாகவும், ஆதலால் அந்த காட்சிகளை காவ்யா மாதவனும் பார்த்து இருக்க கூடும் என்று இயக்குனர் பாலசந்தரகுமார் தெரிவித்து உள்ளார். இதை தொடர்ந்து காவ்யா மாதவனும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படுவார் என்பது உறுதியாகி உள்ளது. இதனிடையே நேற்று திடீர் திருப்பமாக திலீப் வீட்டில் வேலை செய்து வந்த சோத்தலையை சேர்ந்த வேலைக்காரர், திலீப்புக்கு எதிராக விசாரணை அதிகாரிகளிடம் சாட்சியம் அளித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் திலீப்பின் திரைப்பட தயாரிப்பு கம்பெனியான கிராண்ட் புரடக்சன்ஸ் மேலாளர் மற்றும் திலீப்பின் சகோதரர் அனூப் ஆகியோரிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர். மேலும் இயக்குனர் பாலசந்திரகுமாருக்கு திரைக்கதை எழுதிய இயக்குனர் ராபியும் நேற்று விசாரணை அதிகாரிகள் முன் ஆஜராகி சாட்சியம் அளித்து உள்ளார்.

Next Story