கே.ஜி.எப்-2 திரைப்படத்தில் நடித்த பிரபல நடிகர் உடல்நலக் குறைவால் காலமானார்; ரசிகர்கள் அதிர்ச்சி!


Image courtesy: twitter
x
Image courtesy: twitter
தினத்தந்தி 7 May 2022 2:15 PM IST (Updated: 7 May 2022 2:15 PM IST)
t-max-icont-min-icon

அவரது மறைவுக்கு கே.ஜி.எப் பட தயாரிப்பாளர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு,

பிரபல கன்னட நடிகர் மோகன் ஜுனேஜா உடல்நலக் குறைவால் காலமானார். 

சுமார் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர் சமீபத்தில் வெளியான கே.ஜி.எப்-2 ல் நடித்திருந்தார். அவர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்து பார்வையாளர்களிடையே பிரபலமானவராக வலம் வந்தவர்.

54 வயதான அவர் நீண்ட நாட்களாகவே கல்லீரல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில், பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு கே.ஜி.எப் பட தயாரிப்பாளர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் அவருடைய ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பலரும் அவரது மறைவுக்கு வருத்தத்தை தெரிவித்துள்ளனர்.

Next Story