ஆயுர்வேத சிகிச்சை பெற நயன்தாரா முடிவு
நயன்தாரா கேரளாவுக்கு சென்று ஆயுர்வேத சிகிச்சை பெற முடிவு செய்திருக்கிறார் என்றும், இதற்காக சுமார் 6 மாத காலம் அவர் நடிப்புக்கு தற்காலிக ஓய்வு கொடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவின் நடிப்பில் தற்போது ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படம் வெளியாகியுள்ளது. அவரின் காதலரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இந்த படம் தற்போது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9-ந் தேதி திருப்பதியில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் நயன்தாரா கேரளாவுக்கு சென்று ஆயுர்வேத சிகிச்சை பெற முடிவு செய்திருக்கிறார் என்றும், இதற்காக சுமார் 6 மாத காலம் அவர் நடிப்புக்கு தற்காலிக ஓய்வு கொடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்போது உடல் இளைத்து மிகவும் ஒல்லியாக காணப்படும் நயன்தாரா, முன்பு போலவே தனது உடலை பொலிவுபடுத்த முடிவு செய்துள்ளார். அதன் பின்னர் புதுப்பொலிவுடன் மீண்டும் படங்களில் நடிக்கவும் இருக்கிறார்.
Related Tags :
Next Story