பிரபாஸ் படக்குழுவினரிடம் இயக்குனர் ராஜமவுலி எழுப்பிய கேள்வி...!


பிரபாஸ் படக்குழுவினரிடம் இயக்குனர் ராஜமவுலி எழுப்பிய கேள்வி...!
x

பிரபாஸ் நடிக்கும் 'கல்கி 2898- ஏடி' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை பாராட்டி இயக்குனர் ராஜமவுலி பதிவிட்டுள்ளார்.

இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'புராஜெக்ட் கே' (Project K). இந்த படத்தில் நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார்.

மேலும், இதில் அமிதாப் பச்சன், கமல், திஷா பதானி, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சயின்ஸ் ஃபிக்சன் படமாக உருவாகும் இந்த படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு 'கல்கி 2898- ஏடி' (KALKI 2898-AD) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை பாராட்டி இயக்குனர் ராஜமவுலி பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர், படக்குழுவிடம் இன்னும் ஒரே ஒரு கேள்வி மட்டும் மீதம் உள்ளது என்று கூறி படத்தின் வெளியீட்டு தேதி எப்பொழுது என்று கேட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.



Next Story