பிரபல நடிகர் மரணம்


பிரபல நடிகர் மரணம்
x

தமிழில் வெளியான ‘சிங்கம்’ படத்தின் இந்தி ரீமேக்கிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்

பிரபல இந்தி நடிகர் ஜெயந்த் சாவர்க்கர். இவருக்கு வயது முதிர்வு, ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து தானேயில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனாலும் சிகிச்சை பலன் இன்றி ஜெயந்த் சாவர்க்கர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 87. ஜெய்ந்த் சாவர்க்கர் இந்தி, மராத்தி மொழிகளில் பல படங்களில் நடித்து இருக்கிறார். தமிழில் வெளியான 'சிங்கம்' படத்தின் இந்தி ரீமேக்கிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். 'ஹரிஓம்', 'சதாசிவ்' உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கு உஷா பெண்ட்சே என்ற மனைவியும், இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். ஜெயந்த் சாவர்க்கர் மறைவுக்கு இந்தி நடிகர்-நடிகைகள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.


Next Story