சில காதல் கதைகள் காலம் கடந்து நிற்கும் - யுவன் ஷங்கர் ராஜா


சில காதல் கதைகள் காலம் கடந்து நிற்கும் - யுவன் ஷங்கர் ராஜா
x

அழகி படத்தின் டிரைலரை வெளியிடுவதில் மகிழ்ச்சி என்று யுவன் ஷங்கர் ராஜா கூறியுள்ளார்.

சென்னை,

தங்கர் பச்சான் இயக்கத்தில் 2002-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அழகி. பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்த அனைத்து பாடல்களும் மிகப் பெரிய ஹிட் ஆகின. மறைந்த பாடகி பவதாரிணி பாடிய "ஒளியிலே தெரிவது தேவதையா" என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது.

பழைய தமிழ்ப் படங்கள் ரீரிலிஸாகுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் அழகி திரைப்படமும் மீண்டும் திரைக்கு வருகிறது. 22 வருடங்களுக்குப் பிறகு திரைக்கு வருவதை இயக்குநரும் நடிகருமான ஆர்.பார்த்திபன் மகிழ்ச்சியுடன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். படம் வரும் மார்ச் 29ஆம் தேதி புதுப்பிக்கப்பட்ட தரத்துடன் வெளியாகிறது.

இந்நிலையில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா படத்தின் மேம்படுத்தப்பட்ட டிரலரை வெளியிட்டுள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில், "சில காதல் கதைகள் காலம் கடந்து நிற்கும். அழகி படத்தின் டிரைலரை வெளியிடுவதில் மகிழ்ச்சி. மார்ச்.29ஆம் தேதி மறுவெளியீடாகிறது. படக்குழுவுக்கு வாழ்த்துகள்" எனக் கூறியுள்ளார்.

1 More update

Next Story