மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் எப்படி இருக்கு...?
தமிழ் சினிமாவில் வெளியாகும் வரலாற்றுத் திரைப்படமாக 'பொன்னியின் செல்வன்' உருவாகியிருப்பதால், இப்படம் பெரும் வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை
மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதி புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வனை பல ஆண்டுகால முயற்சிக்கு பின் படமாக எடுத்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.
டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே 2 வாரங்களுக்கான டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டு சாதனை படைத்தது. இதனால் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றது.
பொன்னியின் செல்வன் வெளியான தியேட்டர் வளாகத்தில் ரசிகர்கள் பேனர்கள், கட் அவுட்கள் வைத்து, மேள தாளத்துடன் கொண்டாடினர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் வெளியாகும் வரலாற்றுத் திரைப்படமாக 'பொன்னியின் செல்வன்' உருவாகியிருப்பதால், இப்படம் பெரும் வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் முதல் காட்சியை பார்த்த டுவிட்டர்வாசிகள் விமரசங்களை பகிர்ந்து வருகின்றனர்.