'பட்டத்து அரசன்' படத்தின் 'அஞ்சனத்தி' வீடியோ பாடல் வெளியீடு
லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.
சென்னை,
'களவாணி', 'வாகை சூடவா' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ஏ.சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள திரைப்படம் 'பட்டத்து அரசன்'. இந்த படத்தில் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.
'பட்டத்து அரசன்' திரைப்படம் நாளை (நவம்பர் 25) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், படக்குழு இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'அஞ்சனத்தி' பாடலின் வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த பாடல் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Presenting the VIDEO SONG of #Anjanathi from #PattathuArasan
— Lyca Productions (@LycaProductions) November 24, 2022
▶️ https://t.co/7sXPO8fO1s
A @GhibranOfficial musical
️@ranjithkg @vandanism
️ @MAmuthavan @SarkunamDir @Atharvaamurali @AshikaRanganath ✨ @thinkmusicindia @LycaProductions @DoneChannel1 pic.twitter.com/XzXQIXXH92