படிக்கும் போது பள்ளியில் "பாலியல் துஷ்பிரயோகம்" பாரிஸ் ஹில்டன் பரபரப்பு குற்றச்சாட்டு


படிக்கும் போது பள்ளியில் பாலியல் துஷ்பிரயோகம் பாரிஸ் ஹில்டன் பரபரப்பு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 14 Oct 2022 9:49 AM GMT (Updated: 14 Oct 2022 10:14 AM GMT)

உறைவிடப் பள்ளியில் மருத்துவ பரிசோதனையின் போது தான் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவும், தனக்கு என்ன நடக்கிறது என்பது புரியவில்லை என்றும் சமூக ஆர்வலர் பாரிஸ் ஹில்டன் கூறுகிறார்.

புதுடெல்லி

பிரபல நடிகை,சமூக ஆர்வலர்,ஊடக ஆளுமை, தொழிலதிபர், மாடல், என பல்வேறு முகங்களை கொண்டவர் பாரிஸ் விட்னி ஹில்டன். அமெரிக்க நியூயார்க் நகரில் பிறந்து, அங்கேயே வளர்ந்தவர் மற்றும் கலிபோர்னியாவின் பெவர்லி ஹில்ஸில், ஹில்டன் ஓட்டல்களின் நிறுவனர் கான்ராட் ஹில்டனின் கொள்ளுப் பேத்தி ஆவார்.

இவர் 1990 ஆம் ஆண்டு தனக்கு 17 வயதாக இருந்தபோது, 11 மாதங்களுக்கு பிரோவோ கேன்யன் தங்கி படிக்கும் பள்ளியில் சேர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது பள்ளியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டபோது பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவும், அப்போது தனக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

41 வயதான உட்டாவில் உள்ள பிரோவோ கேன்யன் பள்ளியில் தனது இளமை பருவத்தில் நடந்த விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.

மன ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் மற்றும் உடல் ரீதியாகவும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதை வெளிப்படுத்தினார். பள்ளியில் வழக்கமாக கர்ப்பப்பை பரிசோதனைகளை நடக்கும் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

அது உண்மையில் பரிசோதனை இல்லை, பாலியல் தாக்குதல் என்றார். அது எந்த அளவுக்கு பயமாக இருக்கும் என்பதை தனது டுவிட்டர் பக்கத்தில் விவரித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது;-

அவர் கூறியதாவது;-

அதிகாலை மூன்று அல்லது நான்கு மணி இருக்கும், அவர்கள் என்னையும் மற்ற பெண்களையும் அந்த அறைக்குள் அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை செய்வார்கள். ஆனால் அவர்கள் மருத்துவராக இருக்க மாட்டார். இரண்டு வெவ்வேறு ஊழியர்களாக இருப்பார்கள் அங்கு அவர்கள் எங்களை மேசையில் படுக்க வைத்து தங்கள் விரல்களை எங்கள் உறுப்புக்குள் வைப்பார்கள்."

"அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அது நிச்சயமாக அவர்கள் மருத்துவர் அல்ல, அது உண்மையில் பயமாக இருந்தது.

நான் அதைப் பற்றி யோசிக்கிறேன். இப்போது நினைத்துப் பார்த்தால், அது நிச்சயமாக பாலியல் துஷ்பிரயோகம் என கூறினார்

தொடர்ச்சியான டுவீட்களில் பாரிஸ் தனது அனுபவத்தை மேலும் விவரித்தார், அங்கு அவர் "கட்டாயப்படுத்தப்பட்டதாக" குற்றம் சாட்டினார்,

நான் ஒரு மேசையில் படுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, என் கால்களை விரித்து கர்ப்பப்பைவாய் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டேன். அவர்கள் என்னைத் தடுத்து நிறுத்தியபோது நான் அழுதேன், 'அவர்கள் சொன்னார்கள், 'வாயை மூடு. அமைதியாக இரு. போராடுவதை நிறுத்து என கூறினார்கள்.

இந்த வலிமிகுந்த தருணங்களைப் பற்றி மனம் திறந்து பேசுவது முக்கியம், அதில் இருந்து நான் குணமடைந்து இந்த துஷ்பிரயோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க உதவுவேன்."

நான் அனுபவித்ததாகக் கூறப்படும் துஷ்பிரயோகம் பற்றி பேச முடிவு செய்வதற்கு முன்பு "இவ்வளவு காலம் எனது உண்மையை புதைத்துவிட்டதாக" கூறினார்.




Next Story