டைரக்டர்கள் மீது பிரபல நடிகை பாலியல் தொல்லை புகார்


டைரக்டர்கள் மீது பிரபல நடிகை பாலியல் தொல்லை புகார்
x

பிரபல இந்தி நடிகை ஷாமா சிக்கந்தரும் தனக்கு சிலர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் தெரிவித்துள்ளார்.

சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டால் படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்று நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பல நடிகைகள் மீ டூவில் ஏற்கனவே புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி வந்தனர். இந்த நிலையில் பிரபல இந்தி நடிகை ஷாமா சிக்கந்தரும் தனக்கு சிலர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "கடந்த காலங்களில் சிலர் தவறாக என்னை அணுகினர். தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும் என்னுடன் நட்பாக இருந்தபடியே அவர்களின் ஆசைக்கு இணங்கும்படி கேட்டனர். நான் சினிமாவுக்கு வந்த புதிதில் திரையுலகில் இதுபோன்ற நிலைமைகள் இருந்தன. சிலரின் தவறுகளுக்காக மொத்த திரையுலகினரையும் குற்றம் சொல்ல முடியாது. ஆனால் இப்போது இளம் டைரக்டர்களும், தயாரிப்பாளர்களும் பெண்களை கவுரவமாக நடத்துகிறார்கள். திரையுலகில் முன்பு இருந்த நிலைமை இப்போது இல்லை. இன்றைய தலைமுறையினர் அவர்களின் வேலையில்தான் கவனம் செலுத்துகிறார்கள். நல்ல படம் கொடுக்க வேண்டும் என்ற வெறியோடு இருக்கிறார்களே தவிர பெண்கள் மீதான பாலியல் எண்ணங்களை பார்க்க முடிவதில்லை. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு நிலைமை மோசமாக இருந்தது என்றார்.


Next Story