எனக்கு கணவராக வருபவர் தகுதிகள் ரகுல்பிரீத் சிங்
சினிமாவில் அறிமுகமான ஆரம்பத்திலேயே முன்னணி கதாநாயகர்கள் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நடிகை ரகுல்பிரீத் சிங் அளித்துள்ள பேட்டி வருமாறு.
“பெரிய கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்தால்தான் நடிகைகளுக்கு மதிப்பு கிடைக்கும். அதிர்ஷ்டவசமாக எனக்கு சினிமாவில் அறிமுகமான ஆரம்பத்திலேயே முன்னணி கதாநாயகர்கள் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறேன். இப்போது ஆறு படங்கள் கைவசம் உள்ளன. திருமணம் வாழ்க்கையில் முக்கியமானது. எனக்கு பிடித்த மாதிரி திருமணம் செய்து கொள்ள ஆசை. எனக்கு கணவராக வருபவர் வாழ்க்கையில் தெளிவான முடிவுகள் எடுப்பவராகவும், எதிர்காலத்தை எப்படி அமைத்துகொள்ள வேண்டும் என்பதில் எந்த குழப்பமும் இல்லாதவராகவும் இருக்க வேண்டும். அதே மாதிரி சடங்கு, சம்பிரதாயங்களுக்கும், நமது கலாசாரத்துக்கும் மதிப்பு கொடுப்பவராகவும் இருக்க வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை விதிமுறைகளை அவர் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். என்னுடைய குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள் மத்தியில் எனது திருமணம் நடக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.“ இவ்வாறு ரகுல்பிரீத் சிங் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story