தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு மறு தேர்தல் வரும் - ஐசரி கணேஷ்


தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு மறு தேர்தல் வரும் - ஐசரி கணேஷ்
x
தினத்தந்தி 13 Nov 2019 8:50 AM GMT (Updated: 2019-11-13T16:34:27+05:30)

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு மறு தேர்தல் வரும் என ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத் துறை மற்றும் தஞ்சை தென்னக பண்பாட்டு துறை மையமும் இணைந்து ஆண்டுதோறும் நவம்பர் 13 ஆம் தேதியன்று சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு தினம் அனுசரித்து வருகின்றனர்.

அதன்படி புதுச்சேரி கருவடிக்குப்பம் இடுகாட்டில் அமைந்துள்ள சங்கரதாஸ் சுவாமிகள் நினைவிடத்தில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நடிகர் கணேஷ், ஆர்த்தி, விக்னேஷ், உதயா ஆகியோர் சார்பிலும், அரசு சார்பில் சபாநாயகர் சிவக்கொழுந்து மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் நாடக நடிகர்கள் ஆகியோர் மேளதாளத்துடன் அலங்கரிக்கப்பட்ட சங்கரதாஸ் சுவாமிகள் படத்துடன் ஊர்வலமாக வந்து மலரஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஐசரி கணேஷ்,

நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் விதிமுறை மீறப்பட்டுள்ளது என்பதே எங்கள் புகார். தனி அதிகாரி நியமனத்தில் எனது அழுத்தம் ஏதும் இல்லை. மறு தேர்தல் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக நீதிமன்றம் எந்த தீர்ப்பை அளித்தாலும் அதை ஏற்கவுள்ளோம்.  'என்னை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படத்தின் சிக்கல்கள் அனைத்தும் தீர்ந்து விட்டது. திட்டமிட்டப்படி படம் வரும் 29-ம் தேதி வெளியாகும்" என கூறினார்.

Next Story