92வது ஆஸ்கார் விருதுகள்; சிறந்த துணை நடிகை லாரா டெர்ன்


92வது ஆஸ்கார் விருதுகள்; சிறந்த துணை நடிகை லாரா டெர்ன்
x
தினத்தந்தி 10 Feb 2020 3:11 AM GMT (Updated: 10 Feb 2020 8:12 AM GMT)

92வது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் சிறந்த துணை நடிகைக்கான விருது மேரேஜ் ஸ்டோரி என்ற படத்தில் நடித்ததற்காக லாரா டெர்ன்னுக்கு வழங்கப்பட்டது.

லாஸ் ஏஞ்சல்ஸ்,

சர்வதேச அளவில் திரையுலகின் கவுரவமிக்க விருதாக கருதப்படுவது, ஆஸ்கார் எனப்படும் அகாடமி விருது. கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 24 பிரிவுகளில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதை பெறுவதற்காக உலகில் உள்ள அனைத்து மொழி படங்களும் போட்டியிடும்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 92வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா இன்று தொடங்கியது.  இதில் சிறந்த துணை நடிகருக்கான விருது 'ஒன்ஸ் அபான் எ டைம்... இன் ஹாலிவுட்' (ONCE UPON A TIME... IN HOLLYWOOD) என்ற படத்தில் நடித்த நடிகர் பிராட் பிட்டுக்கு வழங்கப்பட்டு உள்ளது.  இதேபோன்று சிறந்த துணை நடிகைக்கான விருது (MARRIAGE STORY) என்ற படத்தில் நடித்த லாரா டெர்ன்னுக்கு  வழங்கப்பட்டது.

சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருது டாய் ஸ்டோரி 4 (TOY STORY 4) பெற்றுள்ளது.

சிறந்த திரைக்கதை பாராசைட் (PARASITE) படம்.

சிறந்த தழுவல் திரைக்கதை ஜோஜோ ரேபிட் (JOJO RABBIT) படம்.

சிறந்த குறும்படம் தி நெய்பர்ஸ்' விடோ (THE NEIGHBOURS’ WIDOW)

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு பிரிவில் 'ஒன்ஸ் அபான் எ டைம்... இன் ஹாலிவுட்' (ONCE UPON A TIME IN HOLLYWOOD) படம்.

சிறந்த ஆடை வடிவமைப்பு பிரிவில் லிட்டில் உமன் (LITTLE WOMEN)

சிறந்த டாகுமெண்ட்ரி படம் அமெரிக்கன் பேக்டரி (AMERICAN FACTORY)

சிறந்த டாகுமெண்ட்ரி குறும்படம் லேர்னிங் டு ஸ்கேட்போர்டு இன் எ வார்சோன் (இஃப் யு ஆர் எ கேர்ள்) (LEARNING TO SKATEBOARD IN A WARZONE (IF YOU’RE A GIRL)) ஆகியவை பெற்றுள்ளன.

இவற்றில் 'ஒன்ஸ் அபான் எ டைம்... இன் ஹாலிவுட்' திரைப்படம் இரு விருதுகளை வென்றுள்ளது.

Next Story