நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு: சந்தேகத்தை கிளப்பும் நடிகை ரியாவின் மொபைல் போன் அழைப்புகள்


நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு: சந்தேகத்தை கிளப்பும் நடிகை ரியாவின் மொபைல் போன் அழைப்புகள்
x
தினத்தந்தி 7 Aug 2020 4:20 PM GMT (Updated: 2020-08-07T21:50:23+05:30)

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கில் ரியா சக்கரபோர்த்தியின் கடந்த ஒரு வருடத்தில் அவரது மொபைல் போன் அழைப்பு விவரங்கள் சில திடுக்கிடும் சந்தேகங்களை உருவாக்கி உள்ளது.

மும்பை

34 வயது இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14-ந்தேதி மும்பை பாந்தி்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சினிமா தொழில் போட்டி காரணமாக இந்த தற்கொலை நடந்து இருக்கலாம் என்ற கோணத்தில் மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் சமீபத்தில் சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி மீது தற்கொலைக்கு தூண்டியதாக பீகாரில் வசித்து வரும் சுஷாந்த் சிங்கின் தந்தை பாட்னா போலீசில் புகார் அளித்தார். அதில் இருந்து இந்த வழக்கு தினமும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ரியா சக்கரபோர்த்தியின்  கடந்த ஒரு வருடத்தில் அவரது மொபைல் போன்  அழைப்பு விவரங்கள் சில திடுக்கிடும் சந்தேகங்களை உருவாக்கி உள்ளது.

ரியா தனது தந்தையுடன் 1192 முறை, அவரது சகோதரர் ஷோயிக் சக்ரவர்த்தியுடன் 1069 முறை பேசி  உள்ளார். ரியாசுஷாந்த் சிங் ராஜ்புத்துடன் 145 முறை உரையாடி உள்ளார்.

ரியா ஒரு வருடத்தில் சாமுவேல் மிராண்டாவை 287 முறை பேசி உள்லார்,  இது காதலர்  சுஷாந்தை விட அதிகமாக உள்ளது.

ஸ்ருதி மோடியுடன், ரியா 791 முறையும் சித்தார்த் பிதானி என்பவருடன்  100 முறையும் பேசி உள்ளார். தீபேஷ் சாவந்த் உடன் 41 முறை உரையாடி உள்ளார், சுஷாந்தின் சகோதரி ராணியுடன் ஒரு வருடத்தில் 4 முறை மட்டுமே பேசி உள்ளார்.

தனது வழிகாட்டியும் திரைப்படத் தயாரிப்பாளருமான மகேஷ் பட்டுடன், ரியா சக்ரவர்த்தி ஒரு வருடத்தில் 16 முறை தொலைபேசியில் உரையாடி உள்ளார். ரியா உதய் சிங் கவுரியை 22 முறையும், பாலிவுட் நடிகர் ஆதித்யா ராய் கபூரை 23 முறையும் அழைத்துள்ளார்.

ட்ரீம் ஹோம் ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் தொலைபேசியில் ஒரு வருடத்தில் 23 முறை பேசி உள்ளார்.

சுவாரஸ்யமாக, மற்ற முக்கியமான விவரங்களும் வெளிவந்துள்ளன. மும்பை டி.சி.பி அபிஷேக் திரிமுகே மற்றும் ரியா நான்கு முறை  உரையாடி செய்தியை பரிமாறிக்கொண்டனர். ஜூன் 21 முதல் ஜூலை 18 வரை, இரண்டு முறை அழைப்பு வந்து உள்ளது.டி.சி.பி திரிமுகே சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கை விசாரித்து வருகிறார், எனவே அழைப்பு பரிமாற்றம் விசாரணையுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.

ரியாவின் தந்தை இந்திரஜித் சக்ரவர்த்தியின் வோடபோன் எண்ணிலிருந்து 230 கால்கள் வந்துள்ளன 660 முறை அவருக்கு அழைப்பு சென்று உள்ளது என்பது அறியப்பட்டுள்ளது.

சுஷாந்த் ரியாவை 28 முறை மட்டுமே அழைத்துள்ளார். நடிகை சுஷாந்திற்கு 259 முறை பேசி உள்ளார்.


Next Story