பமீலா ஆண்டர்சன் தனது மெய்க்காப்பாளருடன் ரகசிய திருமணம்


பமீலா ஆண்டர்சன் தனது மெய்க்காப்பாளருடன் ரகசிய திருமணம்
x
தினத்தந்தி 28 Jan 2021 5:26 PM GMT (Updated: 2021-01-28T22:56:43+05:30)

முன்னாள் நடிகையும் பிளேபாய் மாடலுமான பமீலா ஆண்டர்சன் தனது மெய்க்காப்பாளரான டான் ஹேஹர்ஸ்டை ரகசிய திருமணம் செய்து கொண்டார்.

லண்டன்

முன்னாள் நடிகையும் பிளேபாய் மாடலுமான பமீலா ஆண்டர்சன் தனது மெய்க்காப்பாளரான டான் ஹேஹர்ஸ்டை ரகசிய திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடி 2020 கிறிஸ்துமஸ் ஈவ் அன்று திருமணம் செய்து கொண்டது.

53 வயதான பமீலா ஆண்டர்சன் ஏற்கனவே, 5 வெவ்வேறு நபர்களை திருமணம் செய்து, விவாகரத்து பெற்றிருந்தார். கடந்த 25 ஆண்டுகளில் 5 திருமணங்கள் செய்த அவர், தற்போது, தனது மெய்க்காப்பாளரின் காதல் வலையில் விழுந்துள்ளார்.

இவர்களது ரகசிய திருமணம் வான்கூவர் நகரில் அண்மையில் நடைபெற்றதாகவும், மிகவும் நெருங்கிய நட்பு வட்டத்திற்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இது பமீலாவின் ஆறாவது திருமணம். அவர் முதன்முதலில் டாமி லீயை 1995 இல் திருமணம் செய்து கொண்டார், அவருடன் அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.அவர்கள் 1998 இல் விவாகரத்து பெற்றனர், பின்னர் அவர் 2006 இல் பாடகர் கிட் ராக் என்பவரை மணந்தார், அடுத்த ஆண்டே பிரிந்தனர்.2007 ஆம் ஆண்டில், அவர் ரிக் சாலமோனை மணந்தார், ஆனால் 2008 இல் அவரை விவாகரத்து செய்தார். அவர்கள் 2014 இல் மீண்டும் திருமணம் செய்து  கொண்டு 2015 இல் மீண்டும் விவாகரத்து பெற்றனர். 2020 ஆம் ஆண்டில், அவர் ஜான் பீட்டர்ஸை மணந்தார், ஆனால் 12 நாட்களுக்குப் பிறகு அவரை விவாகரத்து செய்தார்.

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாங்கேவுடன் பமீலாவும் உறவு வைத்திருப்பதாக வதந்தி பரவியது.

லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்திற்கு அவர் அடிக்கடி வருகை தருவார் அசாங்கே பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுக்கு பின்னர் 2012 முதல் அரசியல் தஞ்சம் அடைந்து  உள்ளார்.


Next Story