நடிகர் சிலம்பரசனின் மாநாடு தீபாவளிக்கு வெளீயீடு


நடிகர் சிலம்பரசனின் மாநாடு தீபாவளிக்கு வெளீயீடு
x
தினத்தந்தி 11 Sep 2021 8:42 AM GMT (Updated: 2021-09-11T14:15:48+05:30)

நடிகர் சிலம்பரசனின் மாநாடு திரைப்படம் நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளியன்று வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

சென்னை,

சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் தீபாவளிக்கு மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

வரும் தீபாவளி நாளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கியுள்ள ’அண்ணாத்த’ படம் ரிலீசாக உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தல அஜித்தின் ’வலிமை’ படமும் தீபாவளி அன்று ரிலீசாகும் என திரையுலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் சிம்புவின் ’மாநாடு’ படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் ’மாநாடு’ திரைப்படம் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளதால் வரும் தீபாவளியன்று மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள ’மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்பதை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உறுதி செய்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

நிறைவான மகிழ்வில் #மாநாடு படத்தை தீபாவளியன்று வெளியிடுகிறோம். படம் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும். இத்தனை நாட்கள் பேரன்போடு இப்படத்தை தாங்கிக்கொண்ட அனைவருக்கும் நன்றிகள். உங்கள் ஆதரவோடு வருகிறோம். வெல்வோம்.#maanaadu என பதிவிட்டுள்ளார்.

Next Story