புனித் ராஜ்குமார் "எவ்வளவு தங்கமான மனுஷன்...” மறைவுக்கு பின்பு தான் தெரிகிறது - விஜய்சேதுபதி


புனித் ராஜ்குமார் எவ்வளவு தங்கமான மனுஷன்...” மறைவுக்கு பின்பு தான் தெரிகிறது - விஜய்சேதுபதி
x
தினத்தந்தி 4 Nov 2021 2:45 PM GMT (Updated: 2021-11-04T20:15:09+05:30)

புனித் ராஜ்குமாரை இது வரை சந்திக்காமல் இருந்ததற்கு வருத்தப்படுகிறேன் என நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

பெங்களூரு,

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், கடந்த அக்டோபர் 29ம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது உடலுக்கு பொதுமக்களும் திரைத்துறையினரும் காண்டிவரா மைதானத்தில் அஞ்சலி செலுத்தி புனித் ராஜ்குமாருக்கு பிரியாவிடை அளித்தனர்.

இந்தநிலையில்  கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் பிடதியில் உள்ள படப்பிடிப்பு தளத்தில் நடந்து வரும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூருவுக்கு வந்து அங்கிருந்து பிடதிக்கு செல்வது வழக்கம்.

இந்த நிலையில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்பு நடிகர் விஜய் சேதுபதி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

ஒருமுறை கூட அவரை சந்தித்தது இல்லை. படங்கள் மட்டுமே பார்த்துள்ளேன். மறைவுக்கு பின்பு தான் அவர் எவ்வளவு தங்கமான மனுஷன் என்பது தெரிகிறது. இதுவரை சந்திக்காமல் இருந்தது வருத்தம் அளிக்கிறது என்றார்.

Next Story