பயிற்சியாளர் பதவி நேர்காணல் முடிவடைந்தது தேர்வாளர்களை கவர்ந்த சாஸ்திரி- டாம் மூடி


பயிற்சியாளர் பதவி நேர்காணல் முடிவடைந்தது தேர்வாளர்களை கவர்ந்த சாஸ்திரி- டாம் மூடி
x
தினத்தந்தி 10 July 2017 12:28 PM GMT (Updated: 10 July 2017 12:27 PM GMT)

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு நேர்காணல் இன்று நடைபெற்றது. நேர்காணலில் ரவி சாஸ்திரி மற்றும் டாம் மூடி தேர்வாளர்களை கவர்ந்து உள்ளனர்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த அனில் கும்பிளே, கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கடந்த மாதம் 20-ந்தேதி பொறுப்பில் இருந்து விலகினார்.

இதற்கிடையே, பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து இந்திய முன்னாள் வீரர்கள் ரவிசாஸ்திரி, ஷேவாக், லால்சந்த் ராஜ்புத், டோட்டா கணேஷ், ஆஸ்திரேலியாவின் டாம் மூடி, தென்ஆப்பிரிக்காவின் லான்ஸ் குளுஸ்னர், பாகிஸ்தான் முன்னாள் பயிற்சியாளரான இங்கிலாந்தின் ரிச்சர்ட் பைபஸ், ஓமன் அணியின் தேசிய பயிற்சியாளர் ராகேஷ் ஷர்மா, வெஸ்ட் இண்டீசின் பிலிப் சிமோன்ஸ், கிரிக்கெட் பின்னணி எதுவும் இல்லாத 30 வயதான இந்திய மெக்கானிக்கல் என்ஜினீயர் உபேந்திரநாத் பிரமச்சாரி ஆகியோர் பயிற்சியாளர் பதவியை குறி வைத்து விண்ணப்பித்தனர்.

இந்த நிலையில் சச்சின் தெண்டுல்கர், சவுரவ் கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் கொண்ட கிரிக்கெட் வாரிய ஆலோசனை கமிட்டி புதிய பயிற்சியாளர் தேர்வுக்கான நேர்காணலை இன்று பிற்பகல் 1 மணிக்கு மும்பையில் தொடங்க்ஜியது. தெண்டுல்கர் லண்டனில் இருந்ததால்  அவர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இதில் கலந்து கொண்டார்.

இந்த நேர்காணல் நிகழ்ச்சி மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. கிரிக்கெட் வட்டார தகவல் படி சாஸ்திரி மற்றும் டாம் மூடி ஆகியோர் உண்மையில் மிகவும் தேர்வாளர்களை மிகவும் கவர்ந்து உள்ளனர். சேவாக் நன்றாக இருந்தார், மேற்கு இந்திய தீவு சிம்மன்ஸ் நேர்காணலுக்கு அழைக்கப்படவில்லை.

பேட்டிக்கு பிறகு கங்குலி நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்திய அணியின் பயிற்சியாளர் தேர்வு குறித்து இன்னும் ஓரிரு நாளில்,  முடிவு எடுக்கப்படும். வீரர்களுடன்  ஒருங்கிணைந்த  ஒருவர் பயிற்சியாளராக தேவை. தலைமை பயிற்சியாளரை தேர்ந்து எடுப்பதற்கான அனைத்து நடைமுறைகளும் முடிவடைந்து விட்டன. தலைமை பயிற்சியாளர் பதவிக்கு கேப்டன் கங்குலி யாரையும் பரிந்துரைக்கவில்லை. கேப்டன் வீராட் கோலி கருத்து முக்கியம் என்பதால் பயிற்சியாளர் தேர்வு குறித்து அவருடன் ஆலோசனை நடத்தப்படும் இவ்வாறு அவர் கூறினார்.


Next Story