ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சு தேர்வு


ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சு தேர்வு
x
தினத்தந்தி 2 April 2019 2:26 PM GMT (Updated: 2019-04-02T19:56:30+05:30)

பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

ஜெய்ப்பூர்,

ஜெய்ப்பூரில் ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ், விராட்கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையேயான 14-வது லீக் போட்டி தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து பெங்களூர் அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளது. 

நடப்பு ஐபிஎல் தொடரில் வெற்றி கணக்கை தொடங்காத அணிகளாக ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் இருக்கின்றன. இரு அணிகளும் தங்களது முதல் 3 ஆட்டங்களில் தொடர்ந்து தோல்வியை சந்தித்துள்ளது.

எனவே வெற்றி கணக்கை தொடங்கி தங்களுக்குள்ள நெருக்கடியை குறைக்க இரு அணிகளும் கடுமையாக முயலும் என்பதால், இந்த ஆட்டத்தில் அதிரடிக்கு குறைவு இருக்காது.

ராஜஸ்தான் ராயல்ஸ் நட்சத்திர வீரர்கள்: 

கேப்டன் ரஹானே, ஸ்டீவன் சுமித், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர், குல்கர்னி

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் நட்சத்திர வீரர்கள்: 

கேப்டன் விராட்கோலி, டிவில்லியர்ஸ், யுஸ்வேந்திர சாஹல், ஹெட்மயர், உமேஷ் யாதவ், பார்த்தீவ் பட்டேல்

Next Story