ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை அணிக்கு 152 ரன்கள் இலக்கு


ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை அணிக்கு 152 ரன்கள் இலக்கு
x
தினத்தந்தி 11 April 2019 4:11 PM GMT (Updated: 2019-04-11T21:41:06+05:30)

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணிக்கு 152 ரன்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஜெய்ப்பூரில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான 25-வது லீக் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை எடுத்துள்ளது. 

ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 28 ரன்களும், ஜோஸ் பட்லர் 23 ரன்களும் எடுத்தனர். சென்னை அணியில் சிறப்பாக பந்து வீசிய ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட், தீபக் சாஹர் 2 விக்கெட், சாட்னர் 1 விக்கெட், தாகூர் 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதனையடுத்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களம் இறங்க உள்ளது.

Next Story