ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சு தேர்வு


ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சு தேர்வு
x
தினத்தந்தி 5 May 2019 2:13 PM GMT (Updated: 2019-05-05T19:43:13+05:30)

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. #IPL2019 #MIvKKR

மும்பை,

மும்பை வான்கடே மைதானத்தில், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான இறுதி மற்றும் 56-வது லீக் போட்டி தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து கொல்கத்தா அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளது. 

மும்பை அணி ஏற்கனவே பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது. கொல்கத்தா அணியை பொறுத்தவரை வெற்றி பெற்றால் அடுத்த சுற்றை எட்டலாம். தோற்றால் வெளியேற வேண்டியது தான். ஏனெனில் ரன்ரேட்டில் ஐதராபாத் வலுவாக உள்ளது. 

கடந்த 28-ந்தேதி இவ்விரு அணிகளும் கொல்கத்தாவில் சந்தித்த போது கொல்கத்தா அணி 232 ரன்கள் குவித்து இந்த சீசனில் அதிகபட்ச ரன்களை பதிவு செய்து பிரமிக்க வைத்தது. அதற்கு சுடச்சுட பதிலடி கொடுக்க மும்பை வீரர்கள் வரிந்து கட்டுவார்கள். அதனால் இந்த ஆட்டத்தில் நிச்சயம் அனல் பறக்கும்.

Next Story