சிஎஸ்கே கேப்டன் டோனியுடன் எந்த மோதலும் இல்லை - சுரேஷ் ரெய்னா விளக்கம்


சிஎஸ்கே கேப்டன் டோனியுடன் எந்த மோதலும் இல்லை - சுரேஷ் ரெய்னா விளக்கம்
x
தினத்தந்தி 2 Sep 2020 7:42 AM GMT (Updated: 2020-09-02T13:12:55+05:30)

சிஎஸ்கே கேப்டன் டோனியுடன் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று சிஎஸ்கே அணி வீரர் ரெய்னா விளக்கம் அளித்துள்ளார்.

மும்பை,

ஐபிஎல் போட்டியில் இருந்து திடீரென ரெய்னா விலகிய நிலையில் இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-

சிஎஸ்கே அணி உரிமையாளர் சீனிவாசன் என்னை அவரது மகன் போல் பார்க்கிறார்- அணி உரிமையாளர் சீனிவாசன் கூறியதை தந்தை திட்டியது போல் உணருகிறேன்.

அணியில் இருந்து நான் விலகியது பற்றி சீனிவாசன் தெரிவித்த கருத்துக்கள் தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டன. தனிமையில் இருந்தாலும் பயிற்சியில் தான் இருக்கிறேன். விரைவில் சிஎஸ்கே அணிக்கு மீண்டும் திரும்புவேன்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 4 முதல் 5 ஆண்டுகள் விளையாட விரும்புகிறேன். சிஎஸ்கே கேப்டன்  டோனியுடன் எந்தப் பிரச்சினையும் இல்லை. 

குடும்ப சூழ்நிலை கருதியே ஐபிஎல் போட்டியில் இருந்து விலகும் முடிவை எடுத்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story