டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்தியா முதலிடம்...!


டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்தியா முதலிடம்...!
x
தினத்தந்தி 6 Dec 2021 8:57 AM GMT (Updated: 2021-12-06T14:27:21+05:30)

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியதையடுத்து ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.

துபாய்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி 3 டி20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் டி20 தொடரை 3-0 என்ற புள்ளிகள் கணக்கிலும், டெஸ்ட் தொடரை 1-0 என்ற புள்ளிகள் கணக்கிலும் கைப்பற்றி இந்தியா அபார வெற்றிபெற்றது.

இந்நிலையில், இந்தியா-நியூசிலாந்து இடையேயான தொடர் முடிவரைந்துள்ள நிலையில் அணிகளின் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டது. அதில், டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்தியா முதல் இடம் பிடித்துடுள்ளது. 28 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 124 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. 

இந்தியாவுக்கு அடுத்தபடியாக 121 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் நியூசிலாந்தும், 108 புள்ளிகளுடன் தரவரிசை பட்டியலில் 3-வது இடத்தில் ஆஸ்திரேலியாவும் உள்ளன.

ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை தரவரிசையில் 121 புள்ளிகளுடன் நியூசிலாந்து முதலிடத்திலும், 119 புள்ளிகளுடன் இங்கிலாந்து 2-வது இடத்திலும், 116 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா 3-வது இடத்திலும் உள்ளன.

டி20 போட்டிகளை பொறுத்தவரை தரவரிசையில் 275 புள்ளிகளுடன் இங்கிலாந்து முதலிடத்திலும், 267 புள்ளிகளுடன் இந்தியா 2-வது இடத்திலும், 265 புள்ளிகளுடன் பாகிஸ்தான் 3-வது இடத்திலும் உள்ளன. 

Next Story