இலங்கை வீரர் வீசிய பவுன்சர்; இந்திய வீரருக்கு மருத்துவ பரிசோதனை


இலங்கை வீரர் வீசிய பவுன்சர்; இந்திய வீரருக்கு மருத்துவ பரிசோதனை
x
தினத்தந்தி 27 Feb 2022 3:34 AM GMT (Updated: 27 Feb 2022 3:34 AM GMT)

அவருக்கு மருத்துவமனையில் ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

 தர்மசாலா,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் லக்னோவில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 62 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை துவம்சம் செய்தது. நேற்று நடந்த 2-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது.

இந்த  போட்டியின் போது இலங்கை வீரர் லஹிரு குமாரா வீசிய நான்காவது ஓவரின் இரண்டாவது பந்து இஷான் கிஷனின் ஹெல்மெட்டை தாக்கியது. உடனடியாக அவருக்கு களத்தில் இந்திய மருத்துவக் குழுவினர் சோதனையிட்டனர்.

இந்த நிலையில் தற்போது அவருக்கு மருத்துவமனையில்  ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. அவரை தவிர இலங்கை அணியின் பேட்ஸ்மேன் தினேஷ் சந்திமாலும் காயம் காரணமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

Next Story