தேவ்தத் படிக்கல் அடித்த சிக்சரால் தேசிய பூங்காவிற்கு கிடைத்த ரூ.5 லட்சம் ..!


Image Courtesy : @IPL
x
Image Courtesy : @IPL
தினத்தந்தி 29 March 2022 4:36 PM GMT (Updated: 2022-03-29T22:06:15+05:30)

படிக்கல் அடித்த சிக்சரால் காசிரங்கா தேசிய பூங்காவில் உள்ள விலங்குகளை பராமரிக்க ரூ.5 லட்சம் கிடைத்துள்ளது.

மும்பை,

15-வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன் கடந்த 26 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்த போட்டி மும்பையில் உள்ள மஹாஸ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறுகிறது.

இரு அணிகளும் இந்த தொடரில் தங்கள் முதல் போட்டியை இன்று விளையாடி வருகின்றனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். 

ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக  ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 20 ரன்களில் வெளியேறினார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய  ஜோஸ் பட்லர்  35 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

சஞ்சு சாம்சன்  25 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். மறுபக்கம் ஐதராபாத் பந்துவீச்சாளர்களை தேவ்தத் படிக்கல் துவம்சம் செய்தார். அவர் 29 பந்துகளில் 41 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்தது. இதைடுத்து 211 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி விளையாடி வருகிறது.

இந்த நிலையில் இந்த போட்டியின் போது ராஜஸ்தான் வீரர் தேவ்தத் படிக்கல் அடித்த சிக்சரால் அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் உள்ள விலங்குகளை பராமரிக்க 5 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.

அதாவது இந்த ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு மைதானத்திலும் பவுண்டரி லைனில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டாடா பஞ்ச் என்ற போர்டில் பேட்ஸ்மேன் அடிக்கும் பந்து பட்டால் அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் உள்ள விலங்குகளை பராமரிக்க 5 லட்சம் ரூபாய் தரப்படும் என்று பிசிசிஐ அறிவித்து இருந்தது.

ஆனால் இதுவரை யாரும் அடிக்காத நிலையில், இன்று படிக்கல் அடித்த பந்து அந்த பலகையில் பட்டது. இதன் மூலம் 5 லட்சம் ருபாய் அந்த பூங்காவுக்கு கிடைத்துள்ளது.

Next Story