ஐபிஎல் ஆல் டைம் சிறந்த அணியின் கேப்டன் இவர் தான் - ஹர்பஜன் சிங் தேர்வு


Image Courtesy : Twitter Mumbai Indians
x
Image Courtesy : Twitter Mumbai Indians
தினத்தந்தி 26 April 2022 3:02 PM GMT (Updated: 2022-04-26T20:32:57+05:30)

ஹர்பஜன் சிங் தனது ஆல் டைம் சிறந்த ஐபிஎல் அணியை தேர்வு செய்துள்ளார்.

மும்பை,

10 அணிகள் இடையிலான 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் நடந்து வருகிறது. இன்று நடைபெறும் போட்டியில் பெங்களூரு - ராஜஸ்தான் அணிகள் மோதி வருகின்றன.

15-வது வருடமாக நடைபெறும் ஐபிஎல் தொடரில் பல நாடுகளை சேர்ந்த வீரர்களும் 2008 ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகின்றனர். இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் தற்போது வர்ணனையாளராக செயல்பட்டு வரும் ஹர்பஜன் சிங் தனது ஆல் டைம் சிறந்த ஐபிஎல் அணியை தேர்வு செய்துள்ளார்.

ஆல்டைம் சிறந்த லெவன் அணியின் தொடக்க வீரர்களாக  ரோஹித் சர்மா மற்றும் கிறிஸ் கெய்ல் ஆகியோரை தேர்வு செய்த ஹர்பஜன் 3ம் வரிசையில் விராட் கோலியை தேர்வு செய்துள்ளார்.

4ம் வரிசை வீரராக ஷேன் வாட்சனையும், 5ம் வரிசையில் டிவில்லியர்ஸையும் விக்கெட் கீப்பர் - ஃபினிஷராக தோனியையும் தேர்வு செய்துள்ளார். ஆல்ரவுண்டர்களாக பொல்லார்டு, ஜடேஜா, சுனில் நரைன் ஆகிய மூவரையும், வேகப்பந்துவீச்சாளராக மலிங்கா மற்றும் பும்ரா ஆகிய இருவரையும் ஹர்பஜன் சிங் தேர்வு செய்துள்ளார்.

ஐபிஎல் ஆல்டைம் லெவனின் கேப்டனாக தோனியை ஹர்பஜன் சிங் தேர்வு செய்துள்ளார்.

Next Story