ஐபிஎல்- ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய மைல்கல்..!! ஹர்பஜன் சாதனையை முறியடித்தார்..!!


Image Courtesy : BCCI / PTI
x
Image Courtesy : BCCI / PTI
தினத்தந்தி 27 April 2022 11:43 AM GMT (Updated: 27 April 2022 11:43 AM GMT)

ரவிச்சந்திரன் அஸ்வின் ஐ.பி.எல். போட்டியில் 150 விக்கெட்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

புனே:

ஐ.பி.எல்.15-வது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. நேற்று நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 29 ரன் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தி வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன் எடுத்தது.அந்த அணியின் ரியான் பராக் இக்கட்டான நேரத்தில் அரைசதம் அடித்து அசத்தினார்.

பின்னர் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 19.3 ஓவர்களில் 115 ரன்னில் சுருண்டது. கேப்டன் டுபெலிசிஸ் அதிகபட்சமாக 23 ரன் எடுத்தார். குல்தீப்சென் 4 விக்கெட்டும், தமிழக வீரர் ஆர்.அஸ்வின் 3 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

இந்த ஆட்டத்தில் 3 விக்கெட் எடுத்ததன் மூலம் தமிழக சுழற்பந்து வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐ.பி.எல். போட்டியில் 152 விக்கெட்கள்  எடுத்து சாதனை படைத்துள்ளார். ஐ.பி.எல்.லில் 150 விக்கெட்டை எடுத்த 8-வது வீரர் அஸ்வின் ஆவர். 2-வது ஆப் ஸ்பின்னர் என்ற பெருமையை பெற்றார்.

இதன் மூலம் அவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சாதனையை முறியடித்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் அதிக விக்கெட்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் பிராவோ- 181 விக்கெட் (159 போட்டி), மலிங்கா-170 விக்கெட் (122), அமித் மிஸ்ரா-166 விக்கெட் (154), யசுவேந்திர சாஹல்- 157 விக்கெட் (122) , பியூஸ் சாவ்லா-157 விக்கெட் (165), ஆர்.அஸ்வின்-152 விக்கெட் (175), புவனேஷ்குமார்-151 விக்கெட் (139), ஹர்பஜன்சிங்-150 விக்கெட் (163) ஆகியோர் முதல் 8 இடங்களில் உள்ளனர்.

Next Story