ஐதராபாத் அணிக்கு எதிரான கடைசி ஓவரில் முகேசிடம் தோனி கூறியது என்ன...?


ஐதராபாத் அணிக்கு எதிரான கடைசி ஓவரில் முகேசிடம் தோனி கூறியது என்ன...?
x
தினத்தந்தி 2 May 2022 7:22 AM GMT (Updated: 2022-05-02T12:52:22+05:30)

ஐதராபாத் அணிக்கு எதிரான கடைசி ஓவரில் பந்து வீசுவதற்கு முன் தோனி கூறியது என்ன என்பது பற்றி முகேஷ் பேட்டியில் கூறியுள்ளார்.
புனே,


ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 46வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின.  இதில், முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 202 ரன்கள் எடுத்திருந்தது.

203 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய ஐதராபாத் அணி முதல் 4 ஓவரில் அதிரடியாக 46 ரன்கள் சேர்த்தது.  அபிசேக் சர்மா மற்றும் ராகுல் திரிபாதி ஜோடி பவர்பிளேயில் பந்துகளை பவுண்டரிக்கு விளாசி தள்ளியது.

எனினும் 6வது ஓவரில் இந்த ஜோடியை முகேஷ் சவுத்ரி பிரித்து அபிசேக்கை வெளியேற்றியது சென்னை அணியை வெற்றியின் பக்கம் திருப்பியது.

4 விக்கெட்டுகளை கைப்பற்றி சென்னை அணியின் வெற்றிக்கு உறுதுணை புரிந்த முகேஷ் போட்டி முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, 6வது ஓவரில் ஒரு விக்கெட் கூட போகவில்லை.  ஒரு கேட்ச்சை தவற விட்டேன் என எனக்கு தெரியும்.  ஆனால், விக்கெட்டை எடுத்தே ஆக வேண்டும்.  நல்லவேளையாக அது நடந்தது என கூறினார்.

கடைசி ஓவரில் ஐதராபாத் அணி வெற்றி பெற 38 ரன்கள் தேவையாக இருந்தது.  அந்த ஓவரை முகேஷ் வீசினார்.  அதற்கு முன் தோனி அவரிடம் என்ன கூறினார் என்பது பற்றி கூறிய முகேஷ், அந்த ஓவரில் தோனி சிறப்பாக எதுவும் என்னிடம் கூறவில்லை.  ஸ்டம்புக்கு மிக நெருக்கத்தில் பந்து வீசும்படி கூறினார்.  ஆர்வகோளாறில், ஏதேனும் வித்தியாச முறையை கையாள முயற்சிக்க வேண்டாம் என்று மட்டும் கூறினார் என முகேஷ் தெரிவித்து உள்ளார்.

இந்த போட்டியில் சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  தோனி மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே சென்னை அணி தனது வெற்றியை பதிவு செய்தது.


Next Story