நடப்பு ஐபிஎல்- லில் மிகப்பெரிய சிக்சர் அடித்த லிவிங்ஸ்டன் - ஐபிஎல் வரலாற்றில் அதிக தூரம் சிக்சர் அடித்த வீரர் யார் தெரியுமா ?


Image Courtesy : Twitter @IPL
x
Image Courtesy : Twitter @IPL
தினத்தந்தி 4 May 2022 1:24 PM GMT (Updated: 4 May 2022 1:24 PM GMT)

லிவிங்ஸ்டன் சிக்சரை தொடர்ந்து ஐபிஎல் வரலாற்றில் அதிக தூரம் சிக்சர் அடித்த வீரர் யார் என ரசிகர்கள் தேட தொடங்கினர்.

மும்பை,

15-வது ஐபிஎல் சீசனில் நேற்று  நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் பஞ்சாப் அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முகமது ஷமி வீசிய 16வது ஓவரில் பஞ்சாப் வீரர் லியாம்  லிவிங்ஸ்டன் அடித்த  ஒரு சிக்சர் 117 மீட்டர் தூரத்திற்கு சென்றது. இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் அடிக்கப்பட்ட மிகபெரிய சிக்சராக இது அமைந்தது.

இவர் அடித்த சிக்சர் ரசிகர்களை மட்டுமின்றி எதிரணி வீரர்களையும் பிரம்மிப்பில் ஆழ்த்தியது. இதனை தொடர்ந்து இணையத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் வரலாற்றில் அதிக தூரம் சிக்சர் அடித்த வீரர்கள் யார் என தேட தொடங்கினர்.

சென்னை அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஆல்பி மார்க்கெல் 125 மீட்டர் தூரத்திற்கு அடித்த சிக்சர் தான் ஐபிஎல் வரலாற்றில் அதிக தூரத்திற்கு அடிக்கப்பட்ட சிக்சராகும்.

2008 ஆம் தொடங்கிய ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுவரை அதிக தூரம் சிக்சர் அடித்த வீரர்களின் பட்டியல் பின்வருமாறு;

1. ஆல்பி மார்க்கெல்- 125மீ 

2.பிரவீன் குமார் - 124 மீ 

3. ஆடம் கில்கிறிஸ்ட்- 122 மீ  

4. ராபின் உத்தப்பா - 120மீ

5.கிறிஸ் கெயில் - 119 மீ  

6. யுவ்ராஜ் சிங்- 119 மீ  

7. ராஸ் டெய்லர் - 119 மீ 

8.  லியாம்  லிவிங்ஸ்டன் - 117 மீ 

Next Story