சதத்தை தவறவிட்ட வார்னர் : வில்லியம்சனின் செயலால் ரசிகர்கள் நெகிழ்ச்சி- வைரல் வீடியோ


Image Courtesy : Instagram David Warner / Twitter
x
Image Courtesy : Instagram David Warner / Twitter
தினத்தந்தி 6 May 2022 8:54 AM GMT (Updated: 2022-05-06T14:24:41+05:30)

டேவிட் வார்னர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 58 பந்துகளில் 92 ரன்கள் குவித்து அசத்தினார்.

மும்பை,

ஐபிஎல் தொடரில் நேற்று  நடைபெற்ற போட்டியில் டெல்லி - ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் டெல்லி அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 58 பந்துகளில் 92 ரன்கள் குவித்து அசத்தினார்.

20 ஓவர்கள் முடிந்த நிலையில் சதத்தை நெருங்கி அதை வார்னர் தவறவிட்டார். முதல் இன்னிங்ஸ் முடிந்து அவர் களத்தை விட்டு வெளியேறும் போது அவரிடம் வந்த ஐதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன் வார்னருக்கு பாராட்டு தெரிவித்து அவரது முதுகில்  தட்டி கொடுத்தார். 

அவரை தொடர்ந்து ஐதராபாத் அணியின் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமாரும் வார்னருக்கு பாராட்டு தெரிவித்தார். இதை மைதானத்தில் பெரிய திரையில் கண்ட ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.
இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதை தொடர்ந்து போட்டி முடிந்த பிறகு வில்லியம்சன்- டேவிட் வார்னர் மைதானத்தில் ஒன்றாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.  அதை வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story