"ஆண்ட்ரே ரஸல் போல் ரிஷப் பண்ட் விளையாட வேண்டும் " - ரவி சாஸ்திரி அறிவுரை..!!


Image Courtesy : Delhi Capitals / IPL / BCCI
x
Image Courtesy : Delhi Capitals / IPL / BCCI
தினத்தந்தி 11 May 2022 12:13 PM GMT (Updated: 2022-05-11T17:43:15+05:30)

போட்டியின் முக்கியமான நேரத்தில் ரிஷப் ஆட்டமிழப்பது அணிக்கு பின்னடைவாக உள்ளது.

மும்பை,

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீசனில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி 10 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது.

அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் ஒவ்வொரு போட்டியிலும் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடினாலும் போட்டியை வெற்றிகரமாக முடிப்பதில் திணறுகிறார். போட்டியின் முக்கியமான நேரத்தில் அவர் ஆட்டமிழப்பது அணிக்கு பின்னடைவாக உள்ளது.

இந்த நிலையில் ரிஷப் பண்ட்-க்கு தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி அறிவுரை வழங்கியுள்ளார். ரிஷப் குறித்து அவர் கூறுகையில், "பண்ட் சரியான "பேட்டிங் டெம்போ-வை " பெற்ற பின் அவர் அதிலிருந்து மாறக்கூடாது என்று நான் நினைக்கிறேன். 

20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் அவர் ஆண்ட்ரே ரஸல் போல் விளையாட வேண்டும். ஒரு பந்து அடிக்கப்பட வேண்டியதாக இருந்தால் நீங்கள் அதிகம் யோசிக்காமல் பந்து வீச்சாளர் யாராக இருந்தாலும் அந்த பந்தை விளாசுங்கள். 

இப்படி நீங்கள் விளையாடினால் அனைவரும்  எதிர்பார்த்ததை விட அதிக போட்டிகளில் நீங்கள் வெற்றி பெறலாம் " என ரவி சாஸ்திரி தெரிவித்தார்.

Next Story