அதிகாரிகள் நடவடிக்கை நெல்லை சந்திப்பு பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

அதிகாரிகள் நடவடிக்கை நெல்லை சந்திப்பு பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 13 Dec 2016 9:00 PM GMT (Updated: 2016-12-13T18:54:10+05:30)

நெல்லை ஈரடுக்கு மேம்பாலத்தின் அடிப்பகுதியில் உள்ள பல கடைக்காரர்கள் சாலையோரத்தையும், நடைமேடையையும் ஆக்கிரமிப்பு செய்து கடைகளை விரிவாக்கம் செய்திருப்பதாக நெஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து அதிகாரிகள் ஆய்வு செய்து அந்த கடைக்காரர்களுக்கு நோட்டீசு அனுப்பினர்

நெல்லை,

நெல்லை சந்திப்பு பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை நெஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றினர்.

சாலையோர ஆக்கிரமிப்பு

நெல்லை ஈரடுக்கு மேம்பாலத்தின் அடிப்பகுதியில் உள்ள பல கடைக்காரர்கள் சாலையோரத்தையும், நடைமேடையையும் ஆக்கிரமிப்பு செய்து கடைகளை விரிவாக்கம் செய்திருப்பதாக நெஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து அதிகாரிகள் ஆய்வு செய்து அந்த கடைக்காரர்களுக்கு நோட்டீசு அனுப்பினர்

இந்த நிலையில் ஈரடுக்கு மேம்பாலம் கீழ் பகுதியில் உள்ள கடைகள், சந்திப்பு பஸ் நிலையம் அருகே உள்ள கடைகளுக்கு முன்பிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நேற்று அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் சுப்புராஜன் தலைமையிலான அதிகாரிகள் இந்த பணியில் ஈடுபட்டனர்.

எந்திரம் மூலம் அகற்றம்

சாலையின் இருபுறமும் கடைகளுக்கு முன்பு போடப்பட்டு இருந்த தகர சீட்டுகள், விளம்பர பலகைகள் உள்ளிட்டவை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன. இனிப்புகடைகள் முன்பும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பின்பு பொதுமக்கள் சாலையோர நடைமேடைகளில் இடையூறு இல்லாமல் சென்று வருகிறார்கள். மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்படுத்தாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

Next Story