பன்றி வேட்டைக்ககாக தயார் செய்யப்பட்ட வெடி மருந்து வெடித்து சிறுவனின் கை துண்டானது மறறொரு சிறுவனின் கண் பறிபோனது


பன்றி வேட்டைக்ககாக தயார் செய்யப்பட்ட வெடி மருந்து வெடித்து சிறுவனின் கை துண்டானது மறறொரு சிறுவனின் கண் பறிபோனது
x
தினத்தந்தி 13 Dec 2016 9:45 PM GMT (Updated: 2016-12-14T01:18:20+05:30)

பன்றி வேட்டைக்ககாக தயார் செய்யப்பட்ட வெடி மருந்து வெடித்து சிறுவனின் கை துண்டானது. மறறொரு சிறுவனின் கண் பறிபோனது. வெடி மருந்துக்கு தீ வைப்பு திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு கொசஸ்தலை ஆற்றங்கரையில் குடிநீர் ஏற்றும் நிலையம் அருகே சில நரிக்குறவர்கள் சிறி

பள்ளிப்பட்டு,

பன்றி வேட்டைக்ககாக தயார் செய்யப்பட்ட வெடி மருந்து வெடித்து சிறுவனின் கை துண்டானது. மறறொரு சிறுவனின் கண் பறிபோனது.

வெடி மருந்துக்கு தீ வைப்பு

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு கொசஸ்தலை ஆற்றங்கரையில் குடிநீர் ஏற்றும் நிலையம் அருகே சில நரிக்குறவர்கள் சிறிய கொட்டகை அமைத்து அதில் வசித்து வருகின்றனர். இவாகள் இரவு நேரத்தில் காட்டுப்பன்றி வேட்டைக்கு துப்பாக்கியுடன் செல்வது வழக்கம்.

அப்போது துப்பாக்கியில் பயன்படுத்தும் வெடி மருந்தை இவர்கள் தயார் செய்து தங்கள் கொட்டகையில் வைத்திருந்தனர். நேற்று காலை 7 மணி அளவில் நரிக்குறவர் கைராசி என்பவரின் மகன்கள் சந்தோஷ் (வயது 6), அல்லுடு (3) ஆகியோர் இந்த வெடி மருந்தை கொட்டகைக்கு வெளியே வைத்து தீ வைத்தனர்.

கை துண்டானது

இதில் காதை பிளக்கும் வகையில் அந்த மருந்து வெடித்து சிதறியது. இதில் சந்தோஷின் கை துண்டாகி முள் புதரில் சென்று விழுந்தது. பக்கத்தில் நின்றிருந்த சிறுவன் அல்லுடுவின் வலது கண் தெறித்து வெளியே வந்து விழுந்தது.

அவர்களை நரிக்குறவர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story