வார்தா புயல் எதிரொலி: சென்டிரல், எழும்பூரில் இருந்து 2–வது நாளாக சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து


வார்தா புயல் எதிரொலி: சென்டிரல், எழும்பூரில் இருந்து 2–வது நாளாக சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து
x
தினத்தந்தி 13 Dec 2016 10:30 PM GMT (Updated: 2016-12-14T02:05:54+05:30)

‘வார்தா’ புயலின் காரணமாக சென்டிரல், எழும்பூரில் இருந்து புறப்படும் சில ரெயில்கள் நேற்று 2–வது நாளாக ரத்து செய்யப்பட்டன. ரெயில்களின் விவரம் வருமாறு:– சென்னை சென்டிரல் மங்களூரு–சென்னை சென்டிரல் எக்ஸ்பிரஸ், மங்களூரு–திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், காரைக்கால்–எ

சென்னை,

‘வார்தா’ புயலின் காரணமாக சென்டிரல், எழும்பூரில் இருந்து புறப்படும் சில ரெயில்கள் நேற்று 2–வது நாளாக ரத்து செய்யப்பட்டன. ரெயில்களின் விவரம் வருமாறு:–

சென்னை சென்டிரல்

மங்களூரு–சென்னை சென்டிரல் எக்ஸ்பிரஸ், மங்களூரு–திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், காரைக்கால்–எர்ணாக்குளம் எக்ஸ்பிரஸ், சென்டிரல்–கேஎஸ்ஆர் பெங்களூரு எக்ஸ்பிரஸ், சென்டிரல்–விஜயவாடா பினாகினி எக்ஸ்பிரஸ், சென்டிரல்–திருப்பதி எக்ஸ்பிரஸ், சென்டிரல்–பெங்களூரு லால்பாக் எக்ஸ்பிரஸ், சென்டிரல்–பெங்களூரு மெயில் எக்ஸ்பிரஸ், சென்டிரல்–விசாகபட்டினம் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம்–சென்டிரல் எக்ஸ்பிரஸ், சென்டிரல்–திருப்பதி சப்தகிரி எக்ஸ்பிரஸ்.

சென்னை எழும்பூர்

மதுரை–எழும்பூர் பாண்டியன் எக்ஸ்பிரஸ், திருச்சி–எழும்பூர் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ், தஞ்சாவூர்–எழும்பூர் எக்ஸ்பிரஸ், ராமேசுவரம்–எழும்பூர் எக்ஸ்பிரஸ், திருச்செந்தூர்–எழும்பூர் எக்ஸ்பிரஸ், வேளாங்கண்ணி–எழும்பூர் எக்ஸ்பிரஸ், ஈரோடு–எழும்பூர்–ஈரோடு சிறப்பு கட்டண ரெயில்கள், எழும்பூர்–காரைக்குடி பல்லவன் எக்ஸ்பிரஸ், எழும்பூர்–கொல்லம் எக்ஸ்பிரஸ், மதுரை–எழும்பூர் வைகை எக்ஸ்பிரஸ், புதுச்சேரி–எழும்பூர் எக்ஸ்பிரஸ், எழும்பூர்–நெல்லை எக்ஸ்பிரஸ், திருவனந்தப்புரம்–எழும்பூர் அனந்தப்புரி எக்ஸ்பிரஸ்.

தாமதமாக

சென்னை எழும்பூரில் இருந்து இயக்கப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ், முத்து நகர் எக்ஸ்பிரஸ், சேது எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் நேற்று அறிவிக்கப்பட்ட நேரத்தை விட தாமதமாக இயக்கப்பட்டன.

மாற்று நேரம்

எழும்பூரில் இருந்து நேற்று காலை 7 மணிக்கு புறப்பட வேண்டிய கயா எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 12390) இன்று (புதன்கிழமை) காலை 7 மணிக்கு மாற்று நேரத்தில் இயக்கப்படும்.


Next Story