ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல்: அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் திருச்சி புறநகர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்


ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல்: அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் திருச்சி புறநகர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 13 Dec 2016 11:00 PM GMT (Updated: 2016-12-14T02:19:22+05:30)

ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல்: அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் திருச்சி புறநகர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

திருச்சி,

ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும், அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்றும் திருச்சி புறநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஜெயலலிதாவுக்கு இரங்கல்

திருச்சி புறநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் தில்லைநகரில் உள்ள புறநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை நடந்தது. கூட்டத்திற்கு புறநகர் மாவட்ட செயலாளர் ரத்தினவேல் எம்.பி. தலைமை தாங்கினார். கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த ஜெயலலிதா உருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் ஜெயலலிதா மறைவுக்கு ஒரு நிமிடம் அனைவரும் மவுன அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

கடந்த 5-ந்தேதி ஜெயலலிதா மறைந்த செய்தியை கேட்டு அ.தி.மு.க.வினர் அனைவரும் மீளாதுயரில் ஆழ்ந்தார்கள். அவரது மறைவு அ.தி.மு.க.விற்கும், தமிழகம் மட்டுமில்லாது, உலகம் முழுவதும் வாழும் அனைத்து தமிழர்களுக்கும், நாட்டிற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு ஆகும். ஜெயலலிதாவை இழந்து வாடும் சசிகலாவுக்கும், கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் திருச்சி புறநகர் மாவட்டம் சார்பில் ஆழந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள் கிறோம்.

சசிகலா பொறுப்பேற்க...

ஜெயலலிதா மறைவால் அவரை இழந்து வாடும் கட்சியினை தலைமை ஏற்று வழிநடத்தவும், கட்சியின் 1½ கோடி தொண்டர்களை வழிநடத்தவும், ஜெயலலிதாவுடன் 33 ஆண்டுகள் உடன் பிறவா சகோதரியாகவும், ஏற்றத்தாழ்வு, சுக துக்கங்களில், அவரது இன்ப, துன்பங்களிலும் உடனிருந்து பங்கு கொண்டவரும், ஜெயலலிதாவுடன் வாழ்ந்து வந்தவரும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக போடப்பட்ட வழக்குகளில் அவருடன் சிறை சென்று கொடுமைகளுக்கு ஆளானவருமாகிய சசிகலா கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்று கட்சியையும், தொண்டர்களையும் வழி நடத்த வேண்டும்.

மேற்கண்ட தீர்மானங் கள் ஏக மனதாக நிறை வேற்றப்பட்டன. கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் சந்திரசேகர், செல்வராஜ், முன்னாள் அமைச்சர்கள் பொன்னுசாமி, பூனாட்சி, அண்ணாவி, முன்னாள் எம்.எல்.ஏ. இந்திராகாந்தி மற்றும் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், பேரூராட்சி நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story