கார்த்திகை தீப திருவிழாவையொட்டி உத்தமர்கோவிலில் மும்மூர்த்திகள் புறப்பாடு சொக்கப்பனை கொளுத்தப்பட்டதை கண்டருளினர்


கார்த்திகை தீப திருவிழாவையொட்டி உத்தமர்கோவிலில் மும்மூர்த்திகள் புறப்பாடு சொக்கப்பனை கொளுத்தப்பட்டதை கண்டருளினர்
x
தினத்தந்தி 13 Dec 2016 10:30 PM GMT (Updated: 13 Dec 2016 8:49 PM GMT)

கார்த்திகை தீப திருவிழாவையொட்டி உத்தமர்கோவிலில் மும்மூர்த்திகள் புறப்பாடு சொக்கப்பனை கொளுத்தப்பட்டதை கண்டருளினர்

கொள்ளிடம் டோல்கேட்,

கார்த்திகை தீப திருவிழாவையொட்டி உத்தமர்கோவிலில் மும்மூர்த்திகள் புறப்பாடு நடந்தது. சொக்கப்பனை கொளுத்தப்பட்டதை சுவாமிகள் கண்டருளினர்.

உத்தமர்கோவில்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகா பிச்சாண்டார்கோவில் கிராமத்தில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், மும்மூர்த்திகள் எழுந்தருளியிருக்கும்் திருத்தலமாக உத்தமர்கோவில் அமைந்துள்ளது. இங்கு வருடந்தோறும் திருக்கார்த்திகை தீபதிருநாளில் மும்மூர்த்திகளான பிரம்மா,பெருமாள்,சிவன்ஆகிய தெய்வங்களின் புறப்பாடு மற்றும் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். இதை முன்னிட்டு நேற்று மும்மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் தனித்தனியே மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.தொடர்ந்து அலங்கார தீபாராதனை காட்டப்பட்டு,மூன்று தெய்வங்களும் ஒரே நேரத்தில் தனித் தனி கேடயத்தில் எழுந்தருளி சொக்கப்பனை கொளுத்தப்பட்டதை கண்டருளினர்.

வீதி உலா

பின்னர் ஒன்றாக கோவிலை சுற்றி வீதி உலா வந்து பக்தர்களுக்கு தரிசனம் தந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மும்மூர்த்திகளை வழிபட்டனர்.மூன்று தெய்வங்களின் அருள்பெற்றும் கோவிலில் மூன்று சொக்கப்பனையும் ஒரே நேரத்தில் காண்பதன் மூலம் மக்கள் தங்களது வாழ்வில் பெரும் பாக்கியத்தை அடைவார்கள் என்பது நம்பிக்கை ஆகும்.திருக்கார்த்திகை தீப திருவிழாவையொட்டி கோவில் சார்பாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Next Story