அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது திரளான பக்தர்கள் தரிசனம்


அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது திரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 13 Dec 2016 10:45 PM GMT (Updated: 2016-12-14T02:19:51+05:30)

அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது திரளான பக்தர்கள் தரிசனம்

குளித்தலை,

அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மகா தீபம்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலையில் ரெத்தினகிரீஸ்வரர் கோவில் உள்ளது. காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள பாடல்பெற்ற சிவத்தலங்களுள் முதலாவதாக இக்கோவில் உள்ளது. 1,017 படிகள் கொண்ட இந்த மலைக்கோவிலில் ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீபதிருநாளில் மகா தீபம் ஏற்றப்பட்டு வழிபடுவது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் கார்த்திகை தீபதிருநாளில் இக்கோவிலின் உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டு சாமிக்கு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது.

மேலும் இக்கோவிலின் அடிவாரம் முதல் மலை உச்சிவரை உள்ள 1,017 படிகள் மற்றும் முக்கிய இடங்களில் விளக்குகள் ஏற்றப்பட்டன.

வேண்டுதல்

மேலும் பக்தர்கள் பலர் 4 கிலோ மீட்டர் சுற்றள வுள்ள இந்த மலையை சுற்றிலும் விளக்கேற்றி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். பக்தர்கள் பலர் மலையை சுற்றிவந்து சாமி தரிசனம் செய்தனர்.

பூஜைகள்

இதேபோல் கோவில் தெப்பக்குளத்தை சுற்றிலும் விளக்கேற்றப்பட்டது. கார்த்திகை தீபதிருநாளையொட்டி குளித்தலையில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு விளக்குகள் ஏற்றப்பட்டன.

பெண்கள் வீட்டில் பூஜைகள் செய்து அனைத்து அறைகளிலும், வீட்டு வாசலிலும் விளக்கேற்றினர்.Next Story