மண் வெட்டியால் தொழிலாளி மீது திடீர் தாக்குதல் போலீசார் விசாரணை


மண் வெட்டியால் தொழிலாளி மீது திடீர் தாக்குதல் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 13 Dec 2016 8:50 PM GMT (Updated: 2016-12-14T02:20:57+05:30)

மண் வெட்டியால் தொழிலாளி மீது திடீர் தாக்குதல் போலீசார் விசாரணை

அரிமளம்,

அரிமளம் அருகே உள்ள மணப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள் (வயது 45). கூலி தொழிலாளியான இவர் மாட்டுவண்டி ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 11-ந்தேதி நள்ளிரவு வேலையை முடித்து விட்டு தனது மாட்டுவண்டியில் அரிமளத்தில் இருந்து மணப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். மணப்பட்டி முன்பு உள்ள புதுக்கண்மாய் அருகே சென்று கொண்டிருக்கும் போது இவருக்கு பின்னால் வந்த மர்ம நபர்கள் அவரது மாட்டுவண்டியில் கிடந்த மண் வெட்டியை எடுத்து அவரை வெட்டினர். இதனால் பலத்த காயம் அடைந்து அலறிய கலியபெருமாளை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து அரிமளம் போலீசார்வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story