ஊராட்சி செயலாளர்களை ரேசன் கார்டு கணக்கெடுப்பு பணிக்கு உட்படுத்தக்கூடாது மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்


ஊராட்சி செயலாளர்களை ரேசன் கார்டு கணக்கெடுப்பு பணிக்கு உட்படுத்தக்கூடாது மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 13 Dec 2016 10:45 PM GMT (Updated: 2016-12-14T02:23:33+05:30)

ஊராட்சி செயலாளர்களை ரேசன் கார்டு கணக்கெடுப்பு பணிக்கு உட்படுத்தக்கூடாது மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

திருவாரூர்,

ஊராட்சி செயலாளர்களை ரேசன் கார்டு பணிக்கு உட்படுத்தக்கூடாது என்று, மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

செயற்குழு கூட்டம்

திருவாரூரில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் சங்கர், மாவட்ட செயலாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க நிர்வாகி ஆனந்த் வரவேற்று பேசினார். ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றிய பணியாளர் சங்க மாவட்ட தலைவர் ராஜா பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

இரங்கல்

ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பது, வேலைப்பளுவில் சிக்கித்தவிக்கும் ஊராட்சி செயலாளர்களை ரேசன் கார்டு கணக்கெடுப்பு மற்றும் ஆய்வு பணிக்கு உட்படுத்தக்கூடாது, இது குறித்து மாவட்ட கலெக்டரை சந்தித்து முறையிடுவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் அரசு பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் அண்ணாத்துரை, மாவட்ட தலைவர் குருசெல்வமணி, மாவட்ட பொருளாளர் அருள்மணி, சுகாதாரத்துறை பணியாளர் நலச் சங்க மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, ஊராட்சி செயலாளர் சங்கத்தின் மாநில தலைவர் தர்மராஜா, மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் சங்க மாவட்ட பொருளாளர் சூரியமூர்த்தி நன்றி கூறினார்.

Next Story