தூத்துக்குடி, முத்தையாபுரத்தில் 17–ந் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள்


தூத்துக்குடி, முத்தையாபுரத்தில் 17–ந் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள்
x
தினத்தந்தி 14 Dec 2016 7:30 PM GMT (Updated: 2016-12-14T19:46:11+05:30)

தூத்துக்குடி நகர்ப்புற கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உயர்அழுத்த மின் பாதையில் உள்ள பழைய மின் கடத்திகளை மாற்றும் பணி வருகிற 17–ந் தேதி(சனிக்கிழமை) நடக்கிறது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி நகர்ப்புற கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உயர்அழுத்த மின் பாதையில் உள்ள பழைய மின் கடத்திகளை மாற்றும் பணி வருகிற 17–ந் தேதி(சனிக்கிழமை) நடக்கிறது. அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை போல்பேட்டை, டி.எம்.சி.காலனி, செல்வநாயகபுரம், எழில்நகர், சுந்தரவேல்புரம் மேற்கு, அம்பேத்கார் நகர் ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும், என தூத்துக்குடி நகர்ப்புற மின்சார வாரிய செயற்பொறியாளர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார்.

அதேபோன்று, முத்தையாபுரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 17–ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. அப்போது, முத்தையாபுரம், பாரதிநகர், அத்திமரப்பட்டி, அனல்மின்நகர் பகுதி, கேம்ப்–1, கேம்ப்–2, தோப்புத்தெரு, வடக்கு தெரு, முள்ளக்காடு, பொட்டல்காடு, அபிராமிநகர், சுனாமிநகர், சவேரியார்புரம், துறைமுகம் மற்றும் துறைமுக குடியிருப்பு பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும், என முத்தையாபுரம் துணை மின்நிலைய செயற்பொறியாளர் சாமுவேல் சுந்தரராஜ் தெரிவித்து உள்ளார்.

Next Story