குடும்ப அட்டை தணிக்கை தொடர்பாக களப்பணியாளர்களுக்கு பயிற்சி


குடும்ப அட்டை தணிக்கை தொடர்பாக களப்பணியாளர்களுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 14 Dec 2016 9:00 PM GMT (Updated: 14 Dec 2016 5:50 PM GMT)

குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் குடியாத்தம் தாலுகாவில் உள்ள அனைத்து குடும்ப அட்டைகளையும் 100 சதவீதம் வீடு, வீடாக சென்று தணிக்கை மேற்கொள்வது குறித்து களப்பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. தாசில்தார் நெடுமாறன் தலைமை தாங்கினார். துயர்துடைப்பு தாசில

குடியாத்தம்

குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் குடியாத்தம் தாலுகாவில் உள்ள அனைத்து குடும்ப அட்டைகளையும் 100 சதவீதம் வீடு, வீடாக சென்று தணிக்கை மேற்கொள்வது குறித்து களப்பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. தாசில்தார் நெடுமாறன் தலைமை தாங்கினார். துயர்துடைப்பு தாசில்தார் குணசீலன், கூட்டுறவு சார்பதிவாளர் பாலசுப்பிரமணியம், துணை தாசில்தார் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட வழங்கல் அலுவலர் காமாட்சி வரவேற்றார்.

சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் செல்வராஜ் கலந்து கொண்டு குடும்ப அட்டைகள் ஆய்வு மற்றும் களப்பணி செய்வது குறித்தும் விரிவாக விளக்கம் அளித்தார். நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர்கள் அண்ணாமலை, பலராமன், கிராம நிர்வாக அலுவலர்கள் ஜீவரத்தினம், தரணி, சசிகுமார் உள்பட கிராம நிர்வாக அலுவலர்கள், நகராட்சி வருவாய் தண்டலர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், சுகாதார பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள், கிராம உதவியாளர்கள் என 100–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story