‘வார்தா’ புயலால் 200 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த 80 ஆயிரம் வாழைகள் சேதம் போளூர் எம்.எல்.ஏ. பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்


‘வார்தா’ புயலால் 200 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த 80 ஆயிரம் வாழைகள் சேதம் போளூர் எம்.எல்.ஏ. பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்
x
தினத்தந்தி 14 Dec 2016 9:15 PM GMT (Updated: 14 Dec 2016 6:50 PM GMT)

போளூர் பகுதியில் ‘வார்தா’ புயலால் 200 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த 80 ஆயிரம் வாழைகள் சேதமடைந்தன. அதனை போளூர் எம்.எல்.ஏ. சேகரன் பார்வையிட்டு, விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். 80 ஆயிரம் வாழைகள் சேதம் ‘வார்தா’ புயல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை புரட்டிபோட்ட

போளூர்

போளூர் பகுதியில் ‘வார்தா’ புயலால் 200 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த 80 ஆயிரம் வாழைகள் சேதமடைந்தன. அதனை போளூர் எம்.எல்.ஏ. சேகரன் பார்வையிட்டு, விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.

80 ஆயிரம் வாழைகள் சேதம்

‘வார்தா’ புயல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை புரட்டிபோட்டது. புயலின் தாக்கத்தால் போளூர் பகுதியில் மின்கம்பங்கள், மரங்கள் மற்றும் வாழைகள் சரிந்தன.

போளூரை சுற்றியுள்ள கேளூர், அனைபேட்டை, சந்தவாசல், வெள்ளூர், பால்வார்த்துவென்றான், படவேடு, அனந்தபுரம் மல்லிகாபுரம், ரேணுகொண்டாபுரம் மற்றும் கல்வாசல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் புயலால் சேதமடைந்தன.

போளூர் பகுதியில் 200 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்தன. போளூரை அடுத்த கேளூர் அனைபேட்டை கிராமத்தை சேர்ந்த விவசாயி மாணிக்கவேல் நிலத்தில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வாழைகள் புயலால் சேதமடைந்ததை போளூர் எம்.எல்.ஏ. சேகரன் பார்வையிட்டு, மாணிக்கவேலுக்கு ஆறுதல் கூறினார்.

நிவாரண உதவி

தொடர்ந்து பால்வார்த்துவென்றான், வெள்ளூர், வசூர், சேதாரம்பட்டு மற்றும் சேத்துப்பட்டு, பெரணமல்லூர் ஒன்றியங்களில் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்து சேகரன் எம்.எல்.ஏ. ஆறுதல் கூறினார். அப்போது புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசிடம் இருந்து நிவாரண உதவி கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ. விவசாயிகளிடம் தெரிவித்தார்.

அப்போது ஒன்றிய துணை செயலாளர்கள் செங்குணம் காசி, சாதுஆனந்த், ஒன்றிய இளைஞர் அணி சுரேஷ்பாபு, கேளூர் விவசாயிகள் திருநாவுக்கரசு, மாணிக்கம் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story