கோத்தகிரியில் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் காட்டெருமைகளால் பொதுமக்கள் அச்சம்


கோத்தகிரியில் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் காட்டெருமைகளால் பொதுமக்கள் அச்சம்
x
தினத்தந்தி 14 Dec 2016 10:00 PM GMT (Updated: 14 Dec 2016 7:25 PM GMT)

கோத்தகிரியில் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் காட்டெருமைகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். காட்டெருமைகள் நீலகிரி மாவட்டத்தில் காடுகளின் பரப்பளவு நாளுக்குநாள் குறைவடைய தொடங்கி உள்ளது. இதன் காரணமாக வனவிலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து வருகின்றன. இதனால் பொது மக்கள் பீதி அடைந்து வருகின்றனர். குறிப்பாக கோ

கோத்தகிரி

கோத்தகிரியில் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் காட்டெருமைகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

காட்டெருமைகள்

நீலகிரி மாவட்டத்தில் காடுகளின் பரப்பளவு நாளுக்குநாள் குறைவடைய தொடங்கி உள்ளது. இதன் காரணமாக வனவிலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து வருகின்றன. இதனால் பொது மக்கள் பீதி அடைந்து வருகின்றனர். குறிப்பாக கோத்தகிரி மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் உணவு மற்றும் குடிநீர் தேடி காட்டெருமைகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

நேற்று காலை 20-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் கோத்தகிரி சேட்லைன், ஹேப்பி வேலி, வியூஹில் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரிந்தது. இதனை கண்டு அச்சம் அடைந்த பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே தஞ்சமடைந்தனர். காட்டெருமைகள் குடியிருப்பு பகுதிகள் வழியாக சென்று அருகே உள்ள தனியார் குழந்தைகள் காப்பக வளாகத்திற்குள் சென்று ஓய்வெடுத்தன.

பின்னர் அந்த காட்டெருமைகள் அங்கு வளர்ந்திருந்த புற்களை மேய்ந்தன. சுமார் 5 மணி நேரம் அப்பகுதியில் முகாமிட்டு இருந்த காட்டெருமைகள் பின்னர் குடியிருப்பு பகுதிகள் வழியாக மீண்டும் தேயிலைத்தோட்டங் களுக்குள் சென்றன.

வனப்பகுதிக்குள் விரட்ட கோரிக்கை

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:- கடந்த சில வாரங்களாக காட்டெருமைகள் கூட்டம், கூட்டமாக குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து செல்கின்றன. மேலும் குட்டிகளுடன் வரும் காட்டெருமைகள் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் கூலி தொழிலாளர்களை ஓட, ஓட துரத்தி வருகின்றன. ஒருசில நேரங்களில் பொதுமக்களை தாக்கும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட வனத்துறையினர் மனித உயிரிழப்பு ஏற்படும் முன்பு இந்த காட்டெருமைகளை லாங்வுட் போன்ற அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

Next Story