ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் வியாபாரம் பாதிப்பு: சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்


ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் வியாபாரம் பாதிப்பு: சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Dec 2016 10:15 PM GMT (Updated: 14 Dec 2016 8:08 PM GMT)

ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து கடலூரில் மாவட்ட சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டம் புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். இதனால்

கடலூர்,

ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து கடலூரில் மாவட்ட சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். இதனால் தங்களின் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி கடலூர் மாவட்ட சாலையோர சிறுகடை தொழிலாளர் சங்கத்தினர் (சி.ஐ.டி.யூ.) மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைத்தலைவர் சேட்டு தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் கருப்பையன் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யூ. மாவட்ட இணை செயலாளர் சுப்புராயன், சாலையோர சிறுகடை தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் அப்துல்காதர், மாவட்ட இணை செயலாளர்கள் அல்லாபிச்சை, ராஜேந்திரன், மாவட்டக்குழு மனோகரன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

அடையாள அட்டை

ஆர்ப்பாட்டத்தில் சாலையோரம் வியாபாரம் செய்யும் வியாபாரிகளை முறைபடுத்தி, அதே இடத்தில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். சாலையோர வியாபாரிகளுக்கு வழங்கப்படும் கடன் உதவியை ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். ரூ.10-க்கு தரமற்ற பொருட் களை விற்பனை செய்வதை தடுத்து நிறுத்தி, சிறுவணிகர்கள் மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் கடலூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள், சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story