என்.எல்.சி. தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்க மறுப்பதை கண்டித்து நெய்வேலியில், சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்


என்.எல்.சி. தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்க மறுப்பதை கண்டித்து நெய்வேலியில், சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 14 Dec 2016 10:15 PM GMT (Updated: 2016-12-15T01:38:04+05:30)

என்.எல்.சி. தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்க மறுப்பதை கண்டித்து நெய்வேலியில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். பதவி உயர்வு என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் நி

நெய்வேலி

என்.எல்.சி. தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்க மறுப்பதை கண்டித்து நெய்வேலியில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

பதவி உயர்வு

என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட தொழிலாளர்களின் பதவிஉயர்வை உடனடியாக வழங்க வேண்டும், கடந்த காலங்களில் நடைபெற்ற போராட்டத்தின் காரணமாக தொழிலாளர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 6 நாள் ஊதியத்தை வழங்க வேண்டும், நிரந்தர தன்மை உள்ள வேலைகளை தனியாருக்கு வழங்குவதை நிறுத்தி, உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க வேண்டும்.

என்.எல்.சி.க்கு வீடு, நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்கள், ஐ.டி.ஐ. போன்ற பயிற்சி முடித்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், 2-ம் அனல்மின்நிலையம் விரிவாக்க உற்பத்தியில் நிர்வாகம் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 27 கோரிக்கைகளை என்.எல்.சி. இந்தியா நிறுவனத்திடம் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமான சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் வலியுறுத்தி வருகிறது. ஆனால், இதுகுறித்து என்.எல்.சி. நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

உண்ணாவிரதம்

இதையடுத்து, தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்க மறுக்கும் என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்தும், நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி மற்றும் மின் உற்பத்தியில் கவனம் செலுத்தாததை கண்டித்தும் நேற்று நெய்வேலி கியூ பாலம் அருகே சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதற்கு சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் குப்புசாமி உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். சங்க பொதுச் செயலாளர் ஜெயராமன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

உண்ணாவிரத போராட்டத்தில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க பொருளாளர் சீனுவாசன், நிர்வாகிகள் மீனாட்சிநாதன், திருஅரசு, ராஜப்பா, கார்த்திகேயன், மணிமாறன், அந்தோணிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் கருப்பையா உண்ணாவிரதத்தை முடித்து வைத்து பேசினார். 

Next Story